இந்தியாவின் சில்லறை விலை பணவீக்கம் ஜனவரி 2026 இல் புதிய நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) தொடரின் கீழ் 2.75% ஆக பதிவாகியுள்ளது (அடிப்படை: 2024 = 100).
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் (MoSPI) வெளியிடப்பட்ட இந்தத் தரவு, திருத்தப்பட்ட CPI கட்டமைப்பின் கீழ் வெளியான முதல் பணவீக்க மதிப்பீடாகும்.
புதிய CPI தொடர், முந்தைய அடிப்படை ஆண்டான 2012 ஐ மாற்றி வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு (2023–24) அடிப்படையாகக் கொண்டது.
CPI கணக்கீட்டுப் பொருட்களில் இப்போது 358 பல்வேறு விகிதப் பங்குகளைக் கொண்ட பொருட்கள் (முன்னர் 299) அடங்கும் என்ற நிலையில்இது மாறிவரும் நுகர்வு முறைகள் மற்றும் சேவைகளின் வளர்ந்து வரும் பங்கைப் பிரதிபலிக்கிறது.
புதிதாக சேர்க்கப்பட்டப் பொருட்களில் ஆன்லைன் ஒளிபரப்பு சேவைகள், கிராமப்புற வீட்டு வசதி, தூய்மையான எரிபொருள்கள் (CNG, PNG), உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் ஆகியவை அடங்கும்.