இந்தியத் தேசியக் கொடுப்பனவுக் கழகம் (NPCI) ஆனது 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் தேதி முதல் புதிய ஒருங்கிணைந்த பண வழங்கீட்டு இடைமுக (UPI) விதிகளை அமல்படுத்தியுள்ளது.
சேவையகத்தின் செயல்பாட்டுச் சுமையைக் குறைக்கவும், அதனைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், பணக் கையிருப்பு குறித்த கோருதல்களின் எண்ணிக்கையினை தற்போது ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே மேற்கொள்ள முடியும்.
தரவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக என்று இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களை தினமும் 25 முறை மட்டுமே பார்க்க முடியும்.
சந்தாக்கள் மற்றும் கட்டணங்கள் போன்ற தானியங்கிக் கட்டணங்கள் காலை 10 மணிக்கு முன், பிற்பகல் 1 மணி முதல் 5 மணி வரை அல்லது இரவு 9:30 மணிக்குப் பிறகு மட்டுமே செயல்படுத்தப்படும்.
பயனர்கள், நிலுவையில் உள்ள பரிவர்த்தனை நிலையை, பரிவர்த்தனை முயற்சிகளுக்கு இடையில் 90 வினாடி இடைவெளியுடன் மூன்று முறை மட்டுமே சரிபார்க்க முடியும்.
மோசடி மற்றும் தற்செயலானப் பரிமாற்றங்களைத் தடுக்கப் பணம் செலுத்துவதை உறுதிப்படுத்துவதற்கு முன் பெறுநரின் பெயர் மற்றும் பரிவர்த்தனை அடையாள முகவரி காட்டப்படும்.