புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்
November 19 , 2021 1345 days 547 0
தேசிய அனல்மின் கழகமானது இந்திய எண்ணெய்க் கழக நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.
இது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் ஒத்துழைப்பினை உருவாக்கி குறைந்த கார்பன்/முழு நேர புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்குவதற்கான வாய்ப்புகளை இரு நிறுவனங்களும் ஆய்வு செய்வதற்கான ஒரு திட்டமாகும்.
இது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை அடைதல் மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைத்தல் போன்ற நாட்டின் உறுதிப்பாட்டிற்கு ஆதரவு அளிக்கும் வகையில், இந்தியாவின் இரண்டு முன்னணி தேசிய எரிசக்தி நிறுவனங்கள் மேற் கொள்ளும் இது போன்ற முதல் வகையான ஒரு புதுமையான முன்னெடுப்பாகும்.