TNPSC Thervupettagam

புதுமைப் பெண் திட்டம்

September 9 , 2022 1290 days 7686 0
  • செப்டம்பர் 05 ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் முன்னிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,  'புதுமைப் பெண்' என்ற தலைப்பிலான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டத்தினைத் துவக்கி வைத்தார்.
  • புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், மாநில அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த பெண் மாணவிகளுக்கு, அவர்கள் பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பு அல்லது தொழில் துறைப் பயிற்சிப் படிப்புகளை முடிக்கும் வரை மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும்.
  • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தமிழக அரசினால் அமைக்கப்பட்ட 26 சிறப்புப் பள்ளிகளையும், 15 மாதிரிப் பள்ளிகளையும் திறந்து வைத்தார்.
  • இந்தப் பள்ளிகள் டெல்லியில் ஆம் ஆத்மி அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட பள்ளிகளின் மாதிரியைப் பின்பற்றுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்