இந்தியாவில் உள்ள புத்தாக்க நிறுவனங்களின் நிறுவனர்களுக்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு புதிய டிஜிட்டல் மற்றும் உள்ளார்ந்த தளத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த தளமானது, ‘புத்தாக்க நிறுவனங்களின் நிறுவனர்கள் மையத்திற்கான மைக்ரோ சாப்ட்’ என்று அழைக்கப்படுகிறது.
இது இந்தியாவிலுள்ள புத்தாக்க நிறுவனர்களின் தொடக்க காலத்தியப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுக்கு ஆதரவளிக்கும்.
தொழில் வல்லுநர்கள் மற்றும் மைக்ரோசாஃப்ட் கற்றல் தளம் ஆகியவற்றின் மூலம் வழிகாட்டுதல் மற்றும் திறன் சார்ந்த வாய்ப்புகளைப் பெற இந்த முயற்சி புத்தாக்க நிறுவனங்களுக்கு உதவும்.