புத்தொழில் நிறுவனங்களின் சூழல் அமைப்பிற்கான கூட்டு உருவாக்க நிதி
October 12 , 2025 26 days 68 0
கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகளாவிய புத்தொழில் நிறுவனங்கள் உச்சி மாநாட்டில் தமிழக முதல்வர் 100 கோடி ரூபாய் அளவிலான கூட்டு உருவாக்க நிதியை அறிவித்தார்.
இந்த நிதியை தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புதுமைத் திட்டம் (StartupTN) நிர்வகிக்கும்.
இது தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்ககளை ஆதரிக்கும் துணிகர மூலதன நிதிகளில் முதலீடு செய்யும்.
நடப்பு நிதியாண்டில் இந்தக் கூட்டு உருவாக்க நிதிக்காக 20 கோடி ரூபாய் பிரத்தியேக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2020 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) தளத்தில் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் 36 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் பதிவானது.
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழ்நாட்டில் 2,032 ஆக இருந்த DPIIT துறையினால் அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையானது 12,000 ஆக ஆறு மடங்கு அதிகரித்துள்ளது, அவற்றில் பாதி பெண்கள் தலைமையில் இயங்குகின்றன.
2018 ஆம் ஆண்டில், புத்தொழில் நிறுவனங்களின் உள்கட்டமைப்பில் தமிழ்நாடு மிகக் குறைந்த தரவரிசையில் இருந்தது, ஆனால் 2022 ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்களுள் முதலிடத்திற்கு உயர்ந்தது.
Inc42 நிறுவனத்தின் படி, தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்களால் திரட்டப்பட்ட சராசரி முதலீடு ஆனது 2016 ஆம் ஆண்டில் 1 மில்லியன் டாலரில் இருந்து 2024 ஆம் ஆண்டில் 6 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.