புத்தொழில் நிறுவனங்களின் சூழல் அமைப்பை ஆதரிக்கும் முன்னெடுப்புகள்
November 15 , 2024 243 days 273 0
தமிழ்நாட்டில் புத்தொழில் நிறுவனங்களின் சுற்றுச்சூழலுக்கு உதவும் வகையிலான பல முன்னெடுப்புகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
முதல் முன்னெடுப்பு பெரியார் சமூக நீதி துணிகர முதலீட்டு ஆய்வகம் ஆகும்.
இது சமூக நிறுவனங்கள், பல்வேறு பருவநிலை நடவடிக்கை முன்னெடுப்புகள் மற்றும் பட்டியலிடப் பட்ட சாதியினர்/ பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் புத்தாக்க தொழில் நிறுவனர்களுக்கான பிரத்தியேக ஆலோசனை, திறன் பயிற்சி மற்றும் ஊக்கமளிப்புத் திட்டங்கள் ஆகியவற்றினை முதலீட்டிற்கு முந்தைய மற்றும் முதலீட்டிற்குப் பிந்தைய நிலைகளில் வழங்கும்.
மற்றொன்று தொழில் நயம் வடிவமைப்பு மையம் ஆகும்.
இது இணைய வழி வணிகத் தளங்களில் வெற்றிகரமான இடம் பெற்றிருப்பதன் மூலம் மாநிலத்தில் நேரடி நுகர்வோர் சேவை (D2C) வழங்கும் புத்தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு அரசானது, சமீபத்தில் துபாயில் உலகளாவிய புத்தொழில் ஒருங்கிணைப்பு மையத்தினை நிறுவியது.
சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவிலும் இது போன்ற மையங்கள் விரைவில் நிறுவப் படும்.
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற புகழ்பெற்ற GITEX நிகழ்வில் பங்கேற்க, தமிழகத்தைச் சேர்ந்த 19 புத்தொழில் நிறுவனங்களுக்கும் அரசு நிதியுதவி அளித்தது.