‘தமிழ்நாட்டில் புத்தொழில் நிறுவனங்களுக்கான சூழல் அமைப்பு: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பிலான மாநிலத் திட்டமிடல் ஆணையத்தின் (SPC) அறிக்கையானது முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
பங்கேற்பை அதிகரிப்பதற்காக மாநில அரசின் நிதித் திட்டங்களுக்கான அணுகலை மேம்படுத்துதல் மற்றும் விண்ணப்ப செயல்முறையை எளிமைப்படுத்துதல் ஆகியவற்றை இது பரிந்துரைத்தது.
விழிப்புணர்வு இல்லாமை மற்றும் சிக்கலான நடைமுறைகள் காரணமாக தற்போது குறைந்த பதிவால் பாதிக்கப்பட்டுள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கான சந்தை அணுகலை மேம்படுத்துவதை இது வலியுறுத்தியது.
திறமைகளின் சூழல் அமைப்பை வலுப்படுத்துதல், ஆதரவு அமைப்புகள், சமூக மற்றும் இடஞ்சார்ந்த உள்ளடக்கம் மற்றும் நிலைத் தன்மையை ஒருங்கிணைத்தல் ஆகியவை முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டன.
செயல்பாட்டு நடைமுறைகளின் பயன்திறனை அதிகரிப்பதற்காக ஒழுங்குமுறை செயல்முறைகளை ஒழுங்குப்படுத்துதல் மற்றும் புத்தொழில்களின் தோல்விகளை சரி செய்து ஏற்றல் ஆகியவற்றை இந்த அறிக்கை பரிந்துரைத்தது.
கல்விசார் காப்பு மையங்கள், அரசு நிதியுதவி மற்றும் பொது கொள்முதல் ஆகியவை வெற்றிக்கு வழி வகுத்துள்ளன என்பதை அறிக்கை எடுத்துக்காட்டியதோடு, உற்பத்தி சார் புத்தொழில் நிறுவனங்களுக்கான நிதி அணுகல், திறமை தக்கவைப்பு மற்றும் உள்கட்டமைப்புகளின் கிடைக்கும் தன்மை ஆகியவற்றில் தொடர்ந்து எழும் சவால்களைக் குறிப்பிட்டும் காட்டியது.