G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமையின் கீழ் புத்தொழில் 20 செயல்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தின் போது தொழில்முனைவு மற்றும் புதுமை பற்றிய கொள்கைப் பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்படும்.
புத்தொழில், பெரு நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், புத்தாக்க முகமைகள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்தச் செய்வதற்கும் உலக அளவில் புத்தொழில் நிறுவனங்களை ஆதரிக்கச் செய்வதற்குமான ஒரு வாய்ப்பினை உருவாக்குவதை இந்தக் கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
புத்தொழில் 20 குழுவானது, அடித்தளம் மற்றும் கூட்டணிகள்; நிதி; உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை ஆகிய மூன்று பணிக் குழுக்களைக் கொண்டு உள்ளது.