TNPSC Thervupettagam

புனித ஜார்ஜ் கோட்டை பாரம்பரிய மறுசீரமைப்பு

August 25 , 2026 16 hrs 0 min 47 0
  • தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள 230 ஆண்டுகள் பழமையான எக்ஸ்சேஞ்ச் கட்டிடத்தை (பரிவர்த்தனை கட்டிடம்) மறு சீரமைக்க உள்ளதாக இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை (ASI) அறிவித்துள்ளது.
  • இந்தக் கட்டிடத்தில் உள்ள காலனித்துவ கால அருங்காட்சியகம் ஒன்றும் மறுசீரமைப்புப் பணிகளுடன் சேர்த்து புதுப்பிக்கப்படும்.
  • எக்ஸ்சேஞ்ச் கட்டிடம் 1795 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு, தொடக்கத்தில் மதராஸ் வங்கியைக் கொண்டிருந்தது; இதன் மேல் கூடம் பொது பரிவர்த்தனை கூடமாக செயல்பட்டது.
  • இந்த அருங்காட்சியகத்தில் காலனித்துவ கால ஆயுதங்கள், நாணயங்கள், பதக்கங்கள், சீருடைகள், ஆவணங்கள் மற்றும் இந்தியா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த பிற வரலாற்றுத் தொல்பொருட்கள் உள்ளன.
  • 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியால் நிறுவப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டை, சென்னையின் ஒரு முக்கியமான வரலாற்று அடையாளமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்