TNPSC Thervupettagam

புற்றுநோயை உண்டாக்கும் ஹெபடைடிஸ் D

August 11 , 2025 15 hrs 0 min 35 0
  • உலக சுகாதார அமைப்பானது, அதிகாரப்பூர்வமாக ஹெபடைடிஸ் டி வைரஸ் (HDV) புற்றுநோயை உண்டாக்கக் கூடியதாக வகைப்படுத்தியுள்ளது.
  • ஹெபடைடிஸ் D ஆனது, ஹெபடைடிஸ் B வைரஸ் (HBV) நகலெடுக்க தேவைப்படுகிறது மற்றும் கல்லீரல் புற்றுநோய் பாதிப்பின் அபாயத்தை HBV வைரசை விட இரண்டு முதல் ஆறு மடங்கு அதிகமாக அதிகரிக்கிறது.
  • ஹெபடைடிஸ் D பாதிப்புள்ள நோயாளிகளில் சுமார் 75 சதவீதம் பேரில் 15 ஆண்டுகளுக்குள் கல்லீரல் சிரோசிஸ் எனும் பாதிப்பு உருவாகும்.
  • ஹெபடைடிஸ் B மற்றும் D ஆகியவற்றின் கூட்டுத் தொற்று ஆனது ஹெபடைடிஸ் B பாதிப்பினை விட கடுமையான கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கிறது.
  • அனைவருக்குமான ஹெபடைடிஸ் B தடுப்பூசியானது மறைமுகமாக ஹெபடைடிஸ் D பாதிப்பினைத் தடுக்கக் கூடியது, ஆனால் இந்தியாவில் உள்ள தற்போதைய தடுப்பூசி வழங்கீடு சுமார் 50 சதவீதமாக குறைவாகவே உள்ளது.
  • இந்த புற்றுநோய் வகைப்பாடு HDV தொடர்பான கல்லீரல் புற்றுநோய்க்கான ஆராய்ச்சி மற்றும் உலகளாவியக் கண்காணிப்புக்கான நிதியை அதிகரிக்கும் என்று WHO எதிர்பார்க்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்