S.N. போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மையம் மற்றும் அசோகா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் ஆன்கோமார்க் என்ற செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.
ஆன்கோமார்க் ஆனது மூலக்கூறு மட்டத்தில் புற்றுநோயை பகுப்பாய்வு செய்து, கட்டி வளர்ச்சியை இயக்கும் உயிரியல் செயல்பாடுகளில் (அடையாளங்கள்) கவனம் செலுத்துகிறது.
இந்த அமைப்பு 14 புற்றுநோய் வகைகளில் இருந்து 3.1 மில்லியன் ஒற்றை செல்களை ஆய்வு செய்து கட்டிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய போலி திசு ஆய்வுகளை உருவாக்கியது.
சுயாதீன உலகளாவிய தரவுத் தொகுப்புகளில் OncoMark 99 சதவீதத்திற்கும் அதிகமான உள்ளக துல்லியத்தையும் 96% துல்லியத்தையும் அடைந்தது.
இது மருத்துவர்கள் மோசமான கட்டிகளை அடையாளம் காணவும், தனிப்பயனாக்கப் பட்ட, இலக்கு வைக்கப்பட்ட சிகிச்சைகளை வழி நடத்தவும், இந்தியாவில் துல்லிய மருத்துவத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.