புலிகளின் முக்கியமான 32 பெருவழிப் பாதைகள் – கண்டுபிடிப்பு
December 10 , 2019 2086 days 744 0
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையமானது (National Tiger Conservation Authority - NTCA), “ஒரு நீண்டகால பாதுகாப்பிற்காக புலிகளை இணைத்தல்” என்ற தலைப்பில் ஒரு ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
NTCA ஆனது டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்குப் பயிற்சி நிறுவனத்துடன் (WII - Wildlife Institute of India) இணைந்து இந்த ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணமானது புலிகளின் முக்கியமான 32 பெருவழிப் பாதைகளை குறிப்பிட்டுக் காட்டுகின்றது. இது வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972ன் கீழ் புலிகளின் பாதுகாப்புத் திட்டத்தை விவரிக்கின்றது.
2006 ஆம் ஆண்டு முதல் புலிகளின் எண்ணிக்கையானது ஒவ்வொரு ஆண்டும் 6 % என்ற அளவில் அதிகரித்து வருகின்றது.