TNPSC Thervupettagam

புலிகள் காப்பகங்களுக்கு வெளியே புலிகளைப் பாதுகாக்கும் முன்னெடுப்பு

August 1 , 2026 8 days 61 0
  • பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே வாழும் புலிகளைப் பாதுகாக்கவும், மனித-புலி மோதலைக் குறைக்கவும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) ‘புலிகள் காப்பகங்களுக்கு வெளியே புலிகளைப் பாதுகாக்கும் திட்டம்(TOTR)’ என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
  • தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) கூற்றுப்படி, இந்தியாவின் புலி எண்ணிக்கையில் 35–40% இப்போது நியமிக்கப்பட்ட புலிகள் காப்பகங்களுக்கு வெளியே வாழ்கின்றன என்ற நிலையில் இதனால் நிலப்பரப்பு அளவிலான பாதுகாப்பு அவசியமாகிறது.
  • இதன் முதல் கட்டமானது, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் அசாம் ஆகிய ஒன்பது மாநிலங்களில் உள்ள 40 வனக் கோட்டங்களை உள்ளடக்கும்.
  • இந்த முன்னெடுப்பானது, முன்னெச்சரிக்கை அமைப்புகள், விரைவு அதிரடிப் படைகள், மீட்பு உள்கட்டமைப்பு, கேமரா பொறிகள், ஆளில்லா விமானங்கள், செயற்கை நுண்ணறிவு (AI), உலகளாவிய இடமறிதல் அமைப்பு (GPS) அடிப்படையிலான கண்காணிப்பு, சமூகப் பங்கேற்பு மற்றும் உரிய நேரத்தில் வழங்கப் படும் இழப்பீடு ஆகியவற்றை வலுப்படுத்தும்.
  • இந்தியா 84,488 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 58 புலிகள் காப்பகங்களைக் கொண்டுள்ளது, மேலும் அகில இந்திய புலிகள் மதிப்பீடு (2022) 3,682 புலிகளைப் பதிவு செய்துள்ளது, இது உலகின் காட்டுப் புலிகள் எண்ணிக்கையில் 70% க்கும் அதிகமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்