புலிகள் வாழும் நிலப்பரப்புகள் குறித்த சர்வதேச பயிலரங்கம்
September 20 , 2026 5 hrs 0 min 41 0
புலிகள் வாழும் நிலப்பரப்புகள் குறித்த சர்வதேச பயிலரங்கம் புது தில்லியில் தொடங்கப் பட்டது.
சர்வதேசப் பெரும்பூனை கூட்டமைப்பு (IBCA), ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) மற்றும் தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) ஆகியவை இணைந்து இப்பயிலரங்கத்தை ஏற்பாடு செய்தன.
இதன் மையக்கருத்துரு "புலிகள் நிலப்பரப்புகள்: வாழ்வாதாரம் மற்றும் வருமான உருவாக்கத்திற்கான தூண்களாகப் பாதுகாப்பு, உயிரிப் பொருளாதாரம் மற்றும் சூழலியல் சுற்றுலா" என்பதாகும்.
நிலப்பரப்பு பாதுகாப்பு, திறன் மேம்பாடு மற்றும் இயற்கை சார்ந்த நிதியளிப்பு ஆகியவற்றுக்காக IBCA மற்றும் ADB இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
புலிகள் நிலப்பரப்புகள் நீர் பாதுகாப்பு, பருவநிலை ஒழுங்குமுறை மற்றும் கார்பன் சேமிப்பு ஆகியவற்றிற்கு ஆதரவளிப்பதோடு, உள்ளூர் வாழ்வாதாரங்களையும் ஆதரிக்கின்றன.