புலிகள் வளங்காப்பு மற்றும் யானைகள் வளங்காப்பு திட்ட நிதிப் பிரிவு
August 1 , 2023 738 days 422 0
புலிகள் வளங்காப்புத் திட்டமானது, யானைகள் வளங்காப்புத் திட்டத்துடன் இணைக்கப் பட்டு, ‘புலிகள் வளங்காப்பு மற்றும் யானைகள் வளங்காப்பு திட்ட நிதிப் பிரிவு’ என்ற பெயரில் புதிய பிரிவு ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் புலிகள் வளங்காப்புத் திட்டமானது 50 ஆண்டுகளை நிறைவு செய்தது.
2022 ஆம் ஆண்டில் யானைகள் வளங்காப்புத் திட்டமானது 30 ஆண்டுகளை நிறைவு செய்தது.
2011 ஆம் ஆண்டில் இதே போன்று புலிகள் வளங்காப்புத் திட்டம், யானைத் திட்டம் மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடங்களின் ஒருங்கிணைந்த மேம்பாடு ஆகிய மூன்று மத்திய நிதியுதவித் திட்டங்களை ஒன்றிணைப்பதற்கு, முன்பு இருந்த திட்ட ஆணையம் முன்மொழிந்தது.
2023-24 ஆம் ஆண்டில் புலிகள் வளங்காப்புத் திட்டம் மற்றும் யானைகள் வளங்காப்புத் திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த நிதி ஒதுக்கீடு 331 கோடி ரூபாயாக உள்ளது.