புலிகாட் உவர்நீர் ஏரி – தடுப்பு சுவர்கள் கட்டுமானம்
September 20 , 2017 2846 days 1403 0
இந்தத் தடுப்பு சுவர்கள் ஏரியில் உள்ள நீர் தூர்ந்து போய் விடுவதை தடுப்பதற்கு உதவும்.
இந்த திட்டம் சென்னை ஐ.ஐ.டி -யில் உள்ள பெருங்கடல் பொறியியல் துறையினால் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஏரியில் வண்டல் படிவுகள் படிவது மிகுந்த கவலையளிக்கும் விஷயமாகும். ஒருவேளை ஏரியின் முகத்துவாரம் மூடிக் கொண்டால் ஏரியில் உள்ள கடல் உணவு மற்றும் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்படும். அதன் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிடும் இந்த தடுப்புச் சுவர்கள் அதன் முகத்துவாரத்தை வண்டல் படிவுகளில்லாமல் பாதுகாக்கும்.
புலிகாட் ஏரி இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உவர்நீர் ஏரி ஆகும். இது உயிரிப் பன்மையை பாதுகாக்க உதவுகிறது.