மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் இந்தியாவிலுள்ள 18 புலிகள் வாழிட மாநிலங்களில் புலிப் பேரணிகளைத் தொடங்கி வைத்தார்.
“வனவிலங்கு வாரக் கொண்டாட்டம்” மற்றும் “அசாதி கா அம்ரித் மகோத்சவ்” ஆகியவற்றின் ஓர் அங்கமாக 51 புலிகள் காப்பகங்களில் இந்தப் புலிப் பேரணிகள் தொடங்கப் பட்டன.
மூன்று புலிகள் காப்பகங்களில் இந்தப் பேரணிகள் காணொளி வாயிலாக நடத்தப் பட்டன. அவையாவன :
பிலிகிரி ரங்கநாத சுவாமி ஆலயம் புலிகள் காப்பகம் – கர்நாடகா.
நவேகாவன் நக்சிரா புலிகள் காப்பகம் – மகாராஷ்டிரா.
சஞ்சய் புலிகள் காப்பகம் – மத்தியப் பிரதேசம்.
“India for Tigers – A Rally on wheels” என்ற கருத்துருவுடன் இப்பேரணிகள் தொடங்கப் பட்டன.