வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக 2017 ஆம் ஆண்டில் சத்தீஸ்கரில் புல்வாய்கள் உள்ளூரில் அழிந்துவிட்ட இனமாக அறிவிக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் மாநில வனவிலங்கு வாரியத்தால் ஐந்தாண்டு கால மறு அறிமுகத் திட்டம் தொடங்கப்பட்டது.
புது டெல்லி மற்றும் பிலாஸ்பூரிலிருந்து பர்னவாபரா வனவிலங்குச் சரணாலயத்திற்கு 77 புல்வாய்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.
2025 ஆம் ஆண்டில், சரணாலயத்தில் அவற்றின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்தது, என்ற நிலையில்மேலும் அவற்றுள் 100 காட்டுக்குள் விடுவிக்கப்பட்டன என்பதோடு90 இன்னும் காப்பகங்களில் உள்ளன.
புல்வாய் மான்கள் 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை I யின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன.