முதலாவது புல்வெளிப் பறவைகள் கணக்கெடுப்பு ஆனது அசாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் வளங்காப்பகத்தில் (KNPTR) நடத்தப்பட்டது.
இது காசி ரங்காவின் மூன்று வனவிலங்குப் பிரிவுகளில் 43 புல்வெளி இனங்களைப் பதிவு செய்தது.
அவற்றில் மிகவும் அருகி வரும் வங்காள வரகுக் கோழி, அருகி வரும் ஃபின்ஸ் வீவர் மற்றும் சதுப்பு நில புல் கீச்சான் ஆகியவை அடங்கும்.
மீதமுள்ள 40 இனங்களில், கருப்பு மார்பக கிளி பில், சதுப்பு நில சிலம்பன், சதுப்பு நிலக் கௌதாரி, ஜெர்டனின் சிலம்பன், மெலிந்த அலகு சிலம்பன் மற்றும் கருமீசை புல் குருவி ஆகிய ஆறு இனங்கள் எளிதில் பாதிக்கப்படக் கூடிய பிரிவில் இருந்தன.
இந்தக் கணக்கெடுப்பின் சிறப்பம்சம் என்னவென்றால், உள்நாட்டில் துகுரா சோராய் என்று அழைக்கப்படும் ஃபின்ஸ் வீவர் மிகவும் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்து வருகிறது.
மரங்களின் மேல் கூடு கட்டுவதில் தேர்ச்சிப் பெற்ற இந்த குறிப்பிடத் தக்க பறவை, புல்வெளி ஆரோக்கியத்தின் முக்கிய குறிகாட்டியாகும்.
1,174 சதுர கிலோ மீட்டர் பரப்பிலான காசிரங்கா புல்வெளிகள், வனப்பகுதிகள் மற்றும் ஈர நிலங்களின் கலவையாகும்.
மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை இந்தியாவில் புல்வெளி பறவை பன்முகத் தன்மையின் அடிப்படையில் வளம் நிறைந்த ஒன்றாகும்.