புளூ வேல் விளையாட்டின் ஆபத்துக்கள் பற்றிய நிகழ்ச்சி
October 28 , 2017 2961 days 1043 0
புளூவேல் ஆன்லைன் விளையாட்டானது வாழ்க்கைக்கான ஓர் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. இது பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் ஓர் கற்பித்தல் நிகழ்ச்சியை நடத்துமாறு தூர்தர்ஷன் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றம், தூர்தர்ஷன் இந்த நிகழ்ச்சிக்கான திட்டத்தை உள்துறை அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தகவல், ஒலிபரப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியனவற்றுடன் கலந்தாலோசித்து தயாரிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.