எரி பட்டு வகையானது சமீபத்தில் புவிசார் குறியீட்டினை (GI) பெற்றது.
இந்தப் பட்டு வகையின் உற்பத்தியானது பட்டுப் புழுக்களை வதைக்குட்படுத்தாத முறையில் மேற்கொள்ளப்படுகிறது என்பதால் 'அகிம்சைப் பட்டு' என்று அழைக்கப் படுகிறது.
காசி சமூகம் மேகாலயா மாநிலத்தில் உள்ள எரி பட்டுத் தயாரிப்பினைத் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வளப்படுத்தியுள்ளது.
எரி பட்டு என்பது குளிர்காலத்தில் மக்களை சூடாகவும், கோடையில் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கிறது என்பதால் பல பருவநிலைகளுக்கு ஏற்றதாக உள்ளது.
சமீபத்தில், மேகாலயாவின் முதல்வர் கான்ராட் சங்மா பிரதமருக்கு, அம்மாநிலத்தின் கலாச்சாரப் பெருமையை மிக நன்கு அடையாளப்படுத்துகின்ற வகையில் 'ரிண்டியா பட்டு' ஒன்றைப் பரிசாக வழங்கினார்.