ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசானது, அங்கு உள்ள புவிசார் குறியீடு பெற்ற காஷ்மீரிக் கம்பளத்திற்கான விரைவுக் குறியீட்டை (QR code) அறிமுகப் படுத்தியுள்ளது.
இது கையால் நெய்யப்பட்டக் கம்பளங்களின் நுணுக்கத்தினையும் அதன் நம்பகத் தன்மையையும் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாகும்.
விரைவுக் குறியீடு பதிக்கப்பட்டச் சீட்டினை நகலெடுக்கவோ அல்லது தவறாகப் பயன்படுத்தவோ முடியாது என்பதால், இது பெருநிறுவனங்களால் தயாரிக்கப்படும் போலிக் கம்பளங்களின் உற்பத்தியைத் தடுக்கும்.
இதற்கிடையில், புவிசார் குறியீடு பெற்ற கையால் நெய்யப்பட்டக் கம்பளங்களின் (தரை விரிப்புகளின்) முதல் சரக்குப் பெட்டகமானது இந்த மார்ச் மாதத்தில் புது டெல்லியில் இருந்து ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.