புவித்தாழ்மட்ட சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள் – இணையதள இணைப்பு வசதி
June 8 , 2021 1533 days 772 0
ஒன்வெப் (OneWeb) என்பது புவித்தாழ்மட்ட சுற்றுப்பாதை செயற்கைக்கோள்களுக்கு தகவல்தொடர்பு சேவை வழங்கும் ஒரு அமைப்பாகும்.
36 செயற்கைக்கோள்களின் அடுத்த குழுமத்தினை இது ரஷ்யாவிலிருந்து விண்ணில் ஏவியுள்ளது.
இத்தோடு சுற்றுப்பாதையிலுள்ள ஒன்வெப் நிறுவனத்தின் மொத்த செயற்கைக் கோள்களின் எண்ணிக்கையானது 218 ஆகியுள்ளது.
இது ஒன்வெப் அமைப்பின் 648 புவித்தாழ்மட்ட செயற்கைக் கோள் தொகுப்பின் ஓர் அங்கமாக இருக்கும்.
ஒன்வெப் நிறுவனமானது இவற்றைப் பயன்படுத்தி ஐக்கிய ராஜ்ஜியம், அலாஸ்கா, வட ஐரோப்பா, கிரீன்லாந்து, ஆர்க்டிக் கடல் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இணைய தள இணைப்பு வசதியை வழங்க உள்ளது.
இந்தத் திட்டமானது “Five to 50” சேவை என அழைக்கப் படுகிறது.
இது 50 டிகிரி அட்ச ரேகையின் வடக்கேயுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் இணைய சேவையை வழங்குகிறது.