TNPSC Thervupettagam

பூச்சிக்கொல்லித் தேக்க வரம்பு

May 11 , 2023 821 days 388 0
  • ‘பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயனங்கள் அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பாற் பட்டு இருப்பதாக’ கூறி பல சர்வதேச கொள்முதலாளர்கள் தொடர்ந்து தேயிலைச் சரக்குகளை நிராகரித்ததால் இந்தியத் தேயிலை தொழில்துறை கடும் பாதிப்பினைச் சந்தித்தது.
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது, தேயிலைத் தோட்டங்களில் பயன்படுத்தப்படும் ஐந்து பூச்சிக்கொல்லிகளுக்கான ஒரு அதிகபட்ச பூச்சிக் கொல்லித் தேக்க வரம்பினை (MRL) விதித்துள்ளது.
  • இதில் எமாமெக்டின், பென்சோயேட், ஃபென்பைராக்சிமேட், ஹெக்ஸகோனசோல், ப்ரோபிகோனசோல் மற்றும் குனால்ஃபோஸ் ஆகியவை அடங்கும்.
  • தேயிலைக் கொசுப் பூச்சிக்கு (ஹீலோபெல்டிஸ் தெய்வோரா) எதிரான பூச்சிக் கொல்லியாக அவை பயன்படுத்தப் படுகின்றன.
  • நாட்டின் தெற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகள் இந்தப் பூச்சிகளால் அதிக அளவிலான சேதங்களை எதிர்கொள்வதாக தரவுகள் உள்ளன.
  • தேயிலை உற்பத்தியாளர்கள் தேயிலையில் உள்ள இரசாயனங்களின் அதிகபட்ச பூச்சிக் கொல்லித் தேக்க அளவிற்கான வரம்பினை (MRL) தற்போதைய நிலையிலேயே பராமரிக்கப் பட வேண்டும் என்றும் சில சமயங்களில் மட்டுமே அவை உயர்த்தப்பட வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.
  • பயிரிடுபவர்களின் கூற்றுப்படி, வழக்கமான பூச்சிக்கொல்லிகளுடன் ஒப்பிடும் போது டைமெத்தோயேட் மற்றொரு மலிவான மற்றும் மிகவும் செயல்திறன் மிக்க பூச்சிக் கொல்லியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்