சாக்ஸிஃப்ராகா காண்டலப்ரம் (Saxifraga candelabrum) என்ற தாவரம் பூச்சியுண்ணும் தாவரம் என சார்லஸ் டார்வினின் 150 ஆண்டுகள் பழமையான கணிப்பை அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சுரப்பி ட்ரைக்கோம்கள் எனப்படும் ஒட்டும் முடி போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி சிறிய பூச்சிகளை இந்தத் தாவரம் ஈர்த்துப் பிடிக்கிறது என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது.
சிக்கிய பூச்சிகளைச் செரிமானம் செய்யவும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் பாஸ்படேஸ் என்ற நொதியை இந்தத் தாவரம் பயன்படுத்துகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஐசோடோப் லேபிளிங்/அடையாளமிடல் மூலம் பூச்சிகளிலிருந்து தாவரத்திற்கு நைட்ரஜன்-15 மாற்றப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது இரையிலிருந்து ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவதை நிரூபிக்கிறது.
சாக்ஸிஃப்ராகா காண்டலப்ரம் தாவரம் சீனாவின் கிங்காய்-திபெத் பீடபூமி மற்றும் ஹெங்டுவான் மலைகளில் அதிக உயரங்களில் (2,500–3,300 மீட்டர்) வளர்கிறது.