பூஞ்சைத் தாக்குதல் எதிர்ப்புத் திறன் கொண்ட அன்னாசிப்பழம்
July 26 , 2025 65 days 59 0
கொல்கத்தாவில் உள்ள போஸ் நிறுவனத்தின் இந்திய ஆராய்ச்சியாளர்கள் AcSERK3 மரபணுவை மேம்படுத்துவதன் மூலம் பூஞ்சைகளுக்கான எதிர்ப்புத் திறனைக் கொண்ட அன்னாசிப்பழத்தை உருவாக்கியுள்ளனர்.
இது தீங்கு விளைவிக்கும் பூஞ்சை நோயான ஃபுசாரியோசிஸை எதிர்த்துப் போராடுவதற்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையை வழங்குகிறது.
ஃபுசாரியோசிஸின் விளைவாக சிதைந்தத் தண்டுகள், கருமையடைந்த இலைகள் மற்றும் பழங்களின் உட்சிதைவு ஏற்படுகிறது என்பதோடு இது குறிப்பிடத்தக்க விளைச்சல் குறைப்புகளுக்கு வழி வகுக்கிறது.