இந்தியாவிலிருந்து வந்த புத்தரின் புனித நினைவுச் சின்னங்களின் ஒரு பகுதி பூடானின் திம்புவில் உள்ள தாஷிச்சோட்சோங் மடாலயத்தில் வைக்கப் பட்டுள்ளது.
இந்த நினைவுச் சின்னங்கள் கிராண்ட் குயென்ரி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன.
புத்தரின் பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்கள் என்று அழைக்கப்படும் புனித நினைவுச் சின்னங்கள், முன்னதாக புது டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஆன்மீக ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த நினைவுச் சின்னங்கள் இந்தியாவிலிருந்து பூடானுக்கு அனுப்பப் படுவது இது இரண்டாவது முறையாகும்.