TNPSC Thervupettagam

பூமியின் உட்பகுதியில் பிரம்மாண்டமான நீர் தேக்கம்

March 30 , 2026 11 hrs 0 min 43 0
  • பூமியின் மேற்பரப்பிற்கு கீழே சுமார் 700 கி.மீ ஆழத்தில் கவசப் பகுதியில் ஒரு பெரிய நீர்த் தேக்கத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ள நிலையில் இது பூமியின் நீர் தோற்றம் பற்றிய கருத்துக்களை மாற்றுகிறது.
  • இந்த நீர் திரவ வடிவில் இல்லாமல் கவசத்தில் உள்ள ரிங்வுடைட் எனப்படும் உயர் அழுத்த கனிமத்திற்குள் ரசாயன வடிவில் சிக்கியுள்ளது.
  • இந்தப் பகுதி பூமியின் மேலோட்டத்திற்கு கீழே 410 கி.மீ முதல் 660 கி.மீ ஆழத்தில் அமைந்துள்ள இடைநிலை மண்டலம் என்று அழைக்கப்படுகிறது.
  • நீர் நிறைந்த பகுதிகளில் நில அதிர்வு அலைகளின் வேகம் குறையும் என்பதால், நில அதிர்வு அலை ஆய்வுகள் மற்றும் எரிமலை செயல்பாடுகளிலிருந்து கிடைத்த கனிம மாதிரிகளை ஆய்வு செய்ததன் மூலம் அறிவியலாளர்கள் இந்த நீரைக் கண்டறிந்தனர்.
  • இந்த மறைந்திருக்கும் நீர் தேக்கத்தில் அனைத்து பெருங்கடல்களையும் விட அதிக நீர் இருக்கலாம், ஆனால் அது பாறைகளுக்குள் பூட்டப்பட்டுள்ளது மற்றும் சுதந்திரமாகப் பாயவில்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்