2026 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகின்ற பூமியின் சுழற்சி தினமானது லியோன் ஃபூக்கோவின் ஊசல் அலைவு இயக்கத்தின் செயல்விளக்கத்தின் (1851) 175 ஆம் ஆண்டு நிறைவினைக் குறிக்கிறது.
பூமி அதன் அச்சில் சுழல்கிறது என்பதை சோதனை ரீதியாக நிரூபித்தப் பிரெஞ்சு இயற்பியலாளர் லியோன் ஃபூக்கோவை இந்த நாள் நினைவு கூர்கிறது.
பூமியின் சுழற்சியை அதன் மாறிவரும் அலைவு திசையின் மூலம் காட்டுவதற்காக, நீண்ட தொங்க விடப்பட்ட ஈயப் பந்தான ஃபூக்கோவின் ஊசலை அவர் பயன்படுத்தினார்.
பூமி சுமார் 24 மணி நேரத்தில் ஒரு முழு சுழற்சியை நிறைவு செய்கிறது என்பதோடு இது பகல் மற்றும் இரவை உருவாக்குகிறது.
இந்தக் கண்டுபிடிப்பு வானியல், வானிலை முறைகள் மற்றும் பெருங்கடல் நீரோட்டங்கள் பற்றிய அறிவியல் புரிதலை மேம்படுத்த உதவியது.