TNPSC Thervupettagam

பூமியின் மெர்கேட்டர் வரைபடம்

August 28 , 2025 25 days 69 0
  • ஆப்பிரிக்க ஒன்றியம் (AU) சமமான புவி வரைபடம் போன்ற மாற்றுகளைக் கொண்டு மெர்கேட்டர் வரைபடத்தை மாற்றுவதற்கான 'Correct the Map' பிரச்சாரத்தை ஆதரித்து ள்ளது.
  • மெர்கேட்டர் வரைபடமானது பள்ளிகள், ஊடகங்கள் மற்றும் இயங்கலைத் தளங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • இது நிலப்பரப்புகளின் அளவை அமைப்பு ரீதியாக உருவேறுபடுத்தி, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் கிரீன்லாந்தை பெரிதுபடுத்திக் காட்டி, ஆப்பிரிக்காவை குறுக்கிக் காட்டுகிறது.
  • 1569 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட மெர்கேட்டர் வரைபடம் ஆனது ஒரு வழிச் செலுத்தல் சிக்கலைத் தீர்க்க முயன்ற பிளெமிஷ் வரைபடவியலாளர் ஜெரார்டஸ் மெர்கேட்டரால் வடிவமைக்கப்பட்டது.
  • ஒரு கப்பல் ஒரு நிலையான திசைகாட்டி திசையைப் பின்பற்றும்போது, ​​அது கடைபிடிக்கும் ரம்ப் கோடு என்று அழைக்கப்படுகின்ற பாதையானது பெரும்பாலான தட்டையான வரைபடங்களில் உள்ள ஒரு வளைகோடாகும்.
  • மெர்கேட்டரின் புவியியல் கணிப்பு வடக்கு-தெற்கு நீட்சியினை நீள் வாக்கில் அமைத்ததால் அனைத்து ரம்ப் கோடுகளும் நேர் கோடுகளாகத் தோன்றின.
  • உருவேறுப்படுத்திய மெர்கேட்டர் அளவுகோல் என்றால், துருவங்களுக்கு அருகிலுள்ள நிலப்பரப்புகள் பெரிதாகவும், அதே நேரத்தில் நிலநடுக் கோட்டிற்கு அருகிலுள்ளவை உண்மையில் இருக்கும் அளவினை விட சிறியதாகத் தோன்றின.
  • இதன் விளைவாக, 30 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட ஆப்பிரிக்கா, பெரும்பாலும் மெர்கேட்டர் வரைபடங்களில் 14 மடங்கு சிறிய கிரீன்லாந்தைப் போலவே பெரியதாகத் தோன்றும்.
  • ஐரோப்பிய கண்டம் மூன்றில் ஒரு பங்கு பெரியதாக இருந்தாலும் ஆப்பிரிக்காவுடன் ஒப்பிடத் தக்க வகையில் பெரிதாகத் தெரிகிறது.
  • இதேபோல், கனடா, ரஷ்யா மற்றும் வடக்கு ஐரோப்பா பெரிதாகத் தோன்றும் அதே நேரத்தில் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற வெப்பமண்டலப் பகுதிகள் அளவில் குறுகி வருகின்றன.
  • மெர்கேட்டர் வரைபடத்திற்கு மாற்றாக சமமான புவி வரைபடம் ஆனது 2018 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • மற்றொரு தெரிவு 1970 ஆம் ஆண்டுகளில் மீண்டும் பிரபலப் படுத்தப்பட்ட கால்-பீட்டர்ஸ் வரைபடம் ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்