TNPSC Thervupettagam

பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள்

January 26 , 2026 14 hrs 0 min 23 0
  • இந்தியாவின் முதல் தனியார் பூமி கண்காணிப்பு (EO) செயற்கைக்கோள் திரள், இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்துடன் (IN-SPACe) இணைந்து பிக்சல் தலைமையிலான கூட்டமைப்பால் உருவாக்கப்படுகிறது.
  • இந்தக் கூட்டமைப்பில் பியர்சைட் ஸ்பேஸ், சாட்சர் அனலிட்டிக்ஸ் இந்தியா மற்றும் துருவா ஸ்பேஸ் ஆகியவை அடங்கும்.
  • இந்தத் திட்டம் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரியைப் பின்பற்றி, செயற்கைக் கோள்கள் முதல் புவிசார் பகுப்பாய்வு வரை முழுமையான EO சுற்றுச் சூழல் அமைப்பை உருவாக்கும்.
  • இந்தத் திரளில் மிக உயர் தெளிவுத்திறன் கொண்ட ஒளியிழை, பல் கற்றை, மீவுயர் திறன் கொண்ட கற்றை மற்றும் சிந்தட்டிக் அப்பர்ச்சர் ரேடார் (SAR) வரைபடமாக்க திறன்களைக் கொண்ட 12 செயற்கைக்கோள்கள் இருக்கும்.
  • இந்த செயற்கைக்கோள்கள் வேளாண்மை, பேரிடர் மேலாண்மை, பருவநிலை ஆய்வுகள், நகர்ப்புறத் திட்டமிடல், நீர் மேலாண்மை மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றில் பயன்பாடுகளை ஆதரித்து, புவிசார் தரவுகளில் இந்தியாவின் தன்னம்பிக்கையை மேம்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்