TNPSC Thervupettagam

பூரி நகரில் பாதுகாப்பான குழாய் நீர்

January 14 , 2026 8 days 44 0
  • ஒடிசாவில் உள்ள பூரி, கொதிக்கவோ அல்லது வடிகட்டவோ அவசியமில்லாமல் நேரடியாக குடிக்கப் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் இந்தியாவின் முதல் நகரமாக அதிகாரப் பூர்வமாக மாறியுள்ளது.
  • பூரி நகரின் இந்த சாதனை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உணவு மற்றும் நீர் சான்றிதழ் குறித்த உச்ச நிலை சான்றளிக்கும் அமைப்பான இந்தியத் தரநிலைகள் வாரியத்தின் (BIS) இணக்கத்துடன் உள்ளது.
  • இந்தப் பணி, பாதுகாப்பான நீர் அணுகலுக்கான மையத்தின் 2015 ஆம் ஆண்டு அடல் புத்துயிர்ப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான திட்டத்தின் (AMRUT) ஒரு பகுதியாகும்.
  • 2017 ஆம் ஆண்டில், 'குழாய்வழி குடிநீர்' என்ற முன்னோடியான முன்னெடுப்பினை அறிமுகப் படுத்திய இந்தியாவின் முதல் மற்றும் ஒரே மாநிலமாக ஒடிசா ஆனது.
  • 2025 ஆம் ஆண்டின் இறுதியில், 3 லட்சம் மக்கள்தொகை கொண்ட பூரி நகர், ஏற்கனவே 24x7 நேரமும் குடிப்பதற்கு பாதுகாப்பான குழாய் நீரை வழங்கும் முதல் நகரமாக இருந்தது.
  • 1908 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ஜெர்சி நகரம் அதன் நீர் விநியோக அமைப்புகளைத் தொடர்ந்து கிருமி நீக்கம் செய்த உலகின் முதல் நகரமாக மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்