உத்தரப்பிரதேச மாநிலத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 341 கிமீ நீளமான பூர்வாஞ்சல் விரைவு வழிச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்த விரைவுவழிச் சாலை ஆனது அந்த மாநிலத்தின் தலைநகரான லக்னோவை காசிப்பூருடன் இணைக்கிறது.
இந்த விரைவுவழிச் சாலையின் முக்கிய அம்சமானது, இந்திய விமானப் படையின் போர் விமானங்களை அவசர காலங்களில் தரையிறக்குவதற்கும் புறப்படுவதற்கும் உதவும் வகையில் 3.2 கி.மீ நீளமுள்ள ஒரு விமான தளத்தினைக் கொண்டதாகும்.
பூர்வாஞ்சல் விரைவுவழிச் சாலையானது லக்னோ மாவட்டத்தில் உள்ள சௌத்சராய் எனும் கிராமத்தில் தொடங்கி 31வது தேசிய நெடுஞ்சாலையினூடே அமைந்த ஹைடாரியா என்ற கிராமத்தில் முடிவடைகிறது.
இந்த விரைவுவழிச் சாலையானது 6 வழிச்சாலையைக் கொண்டுள்ளதோடு, எதிர் காலத்தில் இது 8 வழிச்சாலையாகவும் விரிவுபடுத்தப்படும்.