ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தி அருகே பெங்களூரு–கடப்பா–விஜயவாடா பொருளாதார வழித்தடத்தை (NH-544G) கட்டமைக்கும் போது இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நான்கு கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்தது.
மூன்று வழிப் பாதையில் 9.63 கி.மீ நீளமான தொடர்ச்சியான பிட்டுமினஸ் கான்கிரீட் (BC) இடுதலையும், சுமார் 24 மணி நேரத்தில் அதிக அளவு BC (10,655 மெட்ரிக் டன்) இடுதலையும் NHAI மேற்கொண்டது.
தொடர்ந்து 57,500 மெட்ரிக் டன் BC அமைத்ததற்கும், 52 கி.மீ நீளமுள்ள மூன்று வழிப் பாதையை இடையூறு இல்லாமல் அமைத்ததற்கும் என்று மேலும் இரண்டு சாதனைகள் படைக்கப் பட்டன.
கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை இணைக்கும் இந்த 343 கி.மீ தடம் ஆனது, ஆறு வழிப் பாதை அணுகல் கொண்ட கட்டுப்பாடுடன் கூடிய நெடுஞ்சாலையாகும்.