TNPSC Thervupettagam

பெங்களூரு ஒரு சுகாதாரம் என்ற சோதனைத் திட்டம்

July 2 , 2022 1108 days 480 0
  • பால்வளம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறை அமைச்சகம் ஆனது பெங்களூரில் ‘ஒரு சுகாதாரம்’ என்ற சோதனைத் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இது இந்தியத் தொழில் கூட்டமைப்பு மற்றும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றினை அமலாக்கப் பங்குதாரர்களாகக் கொண்டுச் செயல்படுத்தப்படும்.
  • இது மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் நலன் ஆகியவற்றிற்கானப் பங்கு தாரர்களை ஒரே தளத்தில் கொண்டு வரும்.
  • எதிர்காலத்தில் கோவிட்-19 தொற்றுநோய் போன்ற விலங்குவழித் தொற்று நோய் உருவாவதைத் தடுப்பதற்கான சில தீர்வுகளை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத் துறையானது, கர்நாடகா மாநிலத்தோடுச் சேர்த்து உத்தரகாண்ட் மாநிலத்திலும் இந்த சோதனைத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
  • கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத் துறையானது தேசிய அளவில் ஒரு சுகாதாரச் செயல்திட்டத்தினை உருவாக்க உள்ளது.
  • இது எதிர்காலத்தில் விலங்குவழித் தொற்று நோய் உருவாவதைத் தடுக்க உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்