பெட்ரா மற்றும் எல்லோரா குகைகளின் இரட்டை நகர ஒப்பந்தம்
December 20 , 2025 20 days 119 0
இந்தியாவும் ஜோர்டானும் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளங்களான பெட்ரா மற்றும் எல்லோரா குகைகளுக்கு இடையேயான இரட்டை நகர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
எல்லோரா குகைகள் மகாராஷ்டிராவின் சரணந்திரி மலைகளில் இலகங்கா நதிக்கு அருகில் அமைந்துள்ளன.
எல்லோரா குகைகள் இராஷ்டிர கூடர் மற்றும் யாதவர் வம்சத்தினரால் கி.பி 600 முதல் 1000 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்திற்கு இடையில் செதுக்கப்பட்டன.
இதில் சுவரோவிய ஓவியங்களுடன் இந்து, பௌத்த மற்றும் சமண சமய நினைவுச் சின்னங்கள் உள்ளன.
பெட்ரா குகைகள் இளஞ்சிவப்பு மணற்கல் பாறைகளில் செதுக்கப் பட்டிருப்பதால் ரோஸ் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.
பெட்ரா குகைகள் கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் நபடேயன் பேரரசின் தலைநகராக இருந்தது.
பெட்ரா பகுதியளவு கட்டமைக்கப்பட்டு, பகுதியளவு பாறையில் செதுக்கப்பட்டுள்ளது என்பதோடுமலைகள், குறுகிய கடவுகள் மற்றும் பள்ளத்தாக்குகளால் இது சூழப்பட்டு உள்ளது.