பெண்களின் திருமண வயதை 18 வயதிலிருந்து 21 வயதாக உயர்த்துவதற்கான ஒரு முன்மொழிதலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும் உள்ளது.
இதனை நடைமுறைப் படுத்துவதற்காக வேண்டி குழந்தை திருமண தடைச் சட்டம் 2006, சிறப்புத் திருமணச் சட்டம் 1954 மற்றும் இந்து திருமணச் சட்டம் 1955 ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.