TNPSC Thervupettagam

பெண்களுக்கான ரொக்க உதவித் திட்டங்கள் 2026

March 14 , 2026 3 days 47 0
  • சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அசாம் மற்றும் மணிப்பூர் அரசுகள் பெண்களுக்கு ரொக்க உதவியை அறிவித்துள்ள அதே நேரத்தில் பஞ்சாப் தகுதியுள்ள பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகையை வழங்கியுள்ளது.
  • அசாம் மாநிலம் அருணோடோய் திட்டத்தின் கீழ் சுமார் 40 லட்சம் பயனாளிக் குடும்பங்களுக்குத் தலா ₹9,000 2026 ஆம் ஆண்டு மார்ச் 10, அன்று நேரடிப் பணப் பரிமாற்றம் (DBT) மூலம் வழங்கப்படும் என்று அறிவித்தார் என்பதோடு இந்தத் தொகையில் பிஹு ஊக்கத் தொகை மற்றும் நான்கு மாதத் தவணைகள் (ஜனவரி-ஏப்ரல்) அடங்கும், இதன் மொத்த மதிப்பீடு ₹3,600 கோடி ஆகும்.
  • மணிப்பூர் இன மோதல்களால் பாதிக்கப்பட்ட சுமார் 3.5 லட்சம் பெண்களுக்கு உதவ மணிப்பூர் அரசு ₹350 கோடி ஒதுக்கியுள்ளது.
  • பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு, அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தனது கடைசி பட்ஜெட்டில் தகுதியுள்ள பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்