பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினம் 2025 - நவம்பர் 25
November 27 , 2025 16 hrs 0 min 5 0
இந்த நாள் நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான உலகளாவிய 16 நாட்கள் அளவிலான செயல்பாட்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
டொமினிகன் குடியரசின் சர்வதிகாரி ரஃபேல் ட்ருஜிலோவின் கீழான அநீதிக்கு எதிரான போராட்டத்திற்காக மிராபல் சகோதரிகள் 1960 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதியன்று மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
அவர்களின் புகழ் உலகளாவிய நடவடிக்கைக்கு உத்வேகம் அளித்தது என்பதோடு1993 ஆம் ஆண்டில் பாலின அடிப்படையிலான வன்முறையை வரையறுக்கவும் 1999 ஆம் ஆண்டில் இந்த நாளை நிறுவவும் ஐ.நா.வை வழி நடத்தியது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்திற்கான உலகளாவிய கருத்துரு, "UNiTE to End Digital Violence against All Women and Girls" என்பதாகும்.