TNPSC Thervupettagam

பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற மாநிலம் உத்தரப் பிரதேசம்: NCRB 2017 ஆம் ஆண்டுத் தரவு

November 2 , 2019 2082 days 688 0
  • இந்த அறிக்கையின்படி, நாட்டில் பெண்களுக்கு எதிராக 3.59 லட்சம் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 56,011 வழக்குகளுடன் உத்தரப் பிரதேசம் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 31,979 குற்ற வழக்குகளும் மேற்கு வங்கத்தில் 30,002 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
  • இந்த அறிக்கையின் படி, ‘பெண்களுக்கு எதிரான குற்றம்’ என்பதன் வரையறையில் கொலை, கற்பழிப்பு, வரதட்சணை மரணம், தற்கொலை செய்தல், அமிலத் தாக்குதல், பெண்களுக்கு எதிரான கொடுமை மற்றும் கடத்தல் ஆகியவை அடங்கும்.
  • தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau - NCRB) படி, 2017 ஆம் ஆண்டில் புனேவில் உள்ள தங்கும் விடுதிகள் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்றதாக இருந்தன. இதில் 26 பாலியல் துன்புறுத்தல்கள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து மும்பை (24 பாலியல் துன்புறுத்தல்கள்) நகரமானது பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்றதாக இருக்கின்றது.
  • பணியிடத்தில் துன்புறுத்தல், பொதுப் போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் விடுதிகள் உள்ளிட்ட பிற இடங்கள் உள்ளிட்ட இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்ட பாலியல் துன்புறுத்தல் குறித்த தகவல்களை NCRB வழங்குவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்