பெண்கள் அதிகாரமளித்தல் தொடர்பான G20 அமைப்பின் பணிக்குழு
September 14 , 2023 609 days 335 0
G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள், பெண்கள் அதிகாரமளித்தல் தொடர்பான பணிக் குழுவை நிறுவுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பினை பிரேசில் ஏற்ற பிறகு அதன் முதல் கூட்டத்தைக் கூட்ட உள்ள G20 மகளிர் அமைச்சர்கள் குழுவை ஆதரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரேசில் அரசானது, டிசம்பர் 01 ஆம் தேதியன்று G20 அமைப்பின் தலைமைப் பதவியை இந்தியாவிடமிருந்து அதிகாரப் பூர்வமாகப் பெற உள்ளது.
இந்த அமைப்பின் அடுத்தத் தலைவர்களின் உச்சி மாநாடு ஆனது 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புகழ்பெற்றக் கடலோர உல்லாச நகரமான ரியோ டி ஜெனிரோவில் நடைபெற உள்ளது.