நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையங்களை அமைப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகமானது இந்த நோக்கத்திற்காக நிர்பயா நிதியிலிருந்து ரூ 100 கோடி மதிப்பிலான நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்த உதவி மையங்களில் மகளிர் காவல்துறை அதிகாரிகள் பணியமர்த்தப் படுவார்கள்.
வழக்குரைஞர்கள், உளவியலாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்ற வல்லுநர்களும் இந்த உதவி மையங்களில் ஒரு பகுதியாக இருப்பார்கள். மேலும் இவர்கள் உதவி தேவைப் படுபவர்களுக்கு சட்ட உதவி, ஆலோசனை, தங்குமிடம், மறுவாழ்வு மற்றும் பயிற்சி போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருவார்கள்.