பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் முதல் விண்வெளி நடைபயணம்
March 10 , 2019 2348 days 864 0
மார்ச் 29 அன்று பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளவிருக்கும் முதலாவது விண்வெளி நடைபயணத்தை நாசா நடத்தவிருக்கின்றது.
1984 ஆம் ஆண்டு ஜூலை 25 அன்று சோவியத்தைச் சேர்ந்த ஸ்வெட்லானா சாவிட்ஸ்கயா விண்வெளியில் நடை பயணம் மேற்கொண்ட முதலாவது பெண்மணியாக உருவெடுத்த 35 ஆண்டுகளுக்குப் பிறகு இது நடைபெறவிருக்கிறது.
இந்த விண்வெளி நடை பயணமானது சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனைகளான அனி மெக்லைன் மற்றும் கிரிஸ்டினா கோச் ஆகியோரால் மேற்கொள்ளப்படவிருக்கிறது.
கடைசியாக கோடை காலத்தில் பொருத்தப்பட்ட மின்கலன்களை மாற்றுவதற்காக இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இந்த நடைபயணம் தோராயமாக 7 மணி நேரங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாசா மார்ச் மாதத்தை பெண்களின் வரலாற்று மாதமாக அனுசரிக்கிறது. பொறியியல், விண்வெளி மற்றும் கணிதம் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள் குறித்த தகவல்களுக்காக தனது விண்வெளி நிறுவனத்தில் ஒரு வலைப் பக்கத்தை அது ஏற்படுத்தியுள்ளது.