பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தடுப்பு இணையதளம்
September 22 , 2018 2438 days 818 0
மத்திய உள்துறை அமைச்சகம் ஆட்சேபணைக்குரிய இணையதள தகவல்களை தடுப்பதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தடுப்பு இணையதளம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றது.
இந்த இணையதளம் குழந்தைகள் மீதான பாலியல் முறைகேடு சம்பந்தமான தகவல்களோடு தொடர்புடைய ஆட்சேபணைக்குரிய இணையதள தகவல்கள் மீது குடிமகன்கள் புகார்கள் செய்யும் நோக்கில் உதவும்.
இந்த இணையதளம் வாயிலாக செய்யப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட மாநில/ஒன்றியப் பிரதேசங்களின் காவல்துறை மூலம் கையாளப்படும்.