TNPSC Thervupettagam

பெண்கள், வணிகம் மற்றும் சட்டம் அறிக்கை 2026

March 2 , 2026 11 days 84 0
  • உலக வங்கியானது பெண்கள், வணிகம் மற்றும் சட்டம் (WBL) 2026 அறிக்கையை வெளியிட்டது என்ற நிலையில் இது பெண்களின் பொருளாதார உரிமைகளை செயல்படுத்துவதில் உள்ள இடைவெளிகளை எடுத்துக்காட்டுகிறது.
  • இந்த அறிக்கை, WBL 2.0 கட்டமைப்பைப் பயன்படுத்தி 190 நாடுகளில் பெண்களின் பொருளாதார வாய்ப்புகளைப் பாதிக்கும் சட்டங்களை ஆய்வு செய்கிறது.
  • சட்டக் கட்டமைப்புகளுக்கு உலகளாவிய சராசரி மதிப்பெண் 67.9 ஆகும் ஆனால் ஆதரவான கட்டமைப்புகளுக்கு (47.3) மற்றும் அமலாக்கத்திற்கு (53.4) குறைவாக உள்ளது.
  • மூன்று தூண்களிலும் கிட்டத்தட்ட முழுமையான சட்டப்பூர்வச் சமத்துவம் உள்ள நாடுகளில் 4% பெண்கள் மட்டுமே வாழ்கின்றனர்.
  • தொழிலாளர் பங்களிப்பில் பாலின இடைவெளியைக் குறைப்பதன் மூலம் அடுத்தப் பத்தாண்டுகளில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 20%க்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும் என்று அறிக்கை கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்