தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே உள்ள பெண்ணையாறு நதிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு தீர்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகள் தீர்ப்பாயத்தை அமைப்பதற்கான அறிவிப்பை ஒரு மாதத்திற்குள் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு அது உத்தரவிட்டது.
மாநிலங்களுக்கு இடையேயான ஒரு நதியின் நீர் ஓட்டம் ஒரு தேசியச் சொத்து என்றும், எந்த ஒரு மாநிலமும் அதன் நீரின் மீது பிரத்தியேக உரிமையைக் கோர முடியாது என்றும் தமிழ்நாடு இங்கு வாதிட்டது.
நதிநீர் தொடர்பான 1892 ஆம் ஆண்டு ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு "செல்லுபடியாகும் மற்றும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது" என்றும் இந்த மாநிலம் கூறியது.
ஒரு நதி என்பது, அதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நீரை வழங்கும் நீரோடை, துணை நதிகள் மற்றும் பிற நீர்வழிகளையும் உள்ளடக்கியது என்றும் இந்த மாநிலம் கூறியது.
கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்ட முக்கிய துணை நதியான மார்க்கண்டேய நதியை, அந்த ஒப்பந்தத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டதாகக் கருத முடியாது.
தென்பெண்ணை ஆறு தமிழில் தென்பெண்ணை அல்லது பொன்னையாறு அல்லது பெண்ணையாறு என்று அழைக்கப் படுகிறது.
497 கி. மீ நீளமுள்ள இது, காவேரிக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது நீளமான நதியாகும்.
இந்த நதி கர்நாடகாவின் சிக்கபல்லாப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் உருவாகி, தமிழ்நாட்டின் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
இந்த நதியின் மீது கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய அணை திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள சாத்தனூர் அணை ஆகும்.
இது ஒரு டெல்டாவாகப் பிரிகிறது என்ற நிலையில்அதன் மீது கடலூர் நகரம் அமைந்துள்ளது.