பெண் குழந்தைகளைக் காப்போம், கற்பிப்போம் திட்ட பிரச்சாரத் தூதுவர்
July 22 , 2019 2245 days 1026 0
திருவள்ளூர் மாவட்டத்திற்கான பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்திற்கான பிரச்சார தூதுவராக வேண்டா எனும் பெண்ணை அம்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ராஜ்குமார் நியமித்துள்ளார்.
வேண்டா திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்தவராவார்.
மூன்றாவது பெண் குழந்தையாக பிறந்த இவருக்குப் பிறகு மேலும் பெண் குழந்தைகள் பிறப்பதை விரும்பாமல் இவருக்கு வேண்டா என இவரின் பெற்றோர்கள் பெயரிட்டனர்.
சமீபத்தில் ஒரு ஜப்பான் நிறுவனமானது தங்கள் நிறுவனத்திற்கு வருடத்திற்கு 22 லட்சம் ரூபாய் சம்பளத்தில் இவரை வேலைக்குத் தேர்ந்தெடுத்துள்ளது.