தமிழ்நாடு அரசானது, 1950 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சாலை விதிகளை திருத்த திட்டமிட்டுள்ளது.
இந்தத் திருத்தமானது, முன்னர் ஆபத்தானவை என வகைப்படுத்தப்பட்ட சுமார் 20 செயல்பாடுகளில் பெண்கள் பணியாற்ற அனுமதிக்க உள்ளது.
இரவுநேரப் பணிகளில் ஈடுபட விரும்பும் பெண் தொழிலாளர்களிடமிருந்து எழுத்துப் பூர்வ ஒப்புதல் பெறுவது இந்த திருத்தங்களில் அடங்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஆபத்தான பணிகளில் பணிபுரிய தடை விதிக்கப்படும்.
அனுமதிக்கப்பட்ட பணிகளில் மின்னாற்பகுப்புச் செயல்முறைகள், ஈய செயல்முறையாக்கம், கண்ணாடி உற்பத்தி மற்றும் ஈய சேர்மங்களைக் கையாளுதல் ஆகியவை அடங்கும்.
எரிவாயு உற்பத்தி, பெட்ரோலியம் கையாளுதல், ஊது உலையிடல், தோல் பதனிடுதல், கிராஃபைட் பொடியாக்குதல், ஈய சேர்மங்களை உள்ளடக்கிய அச்சிடல் முறைகள், முந்திரிப் பருப்பு பதப்படுத்துதல், சாயமிடுதல், ஓவியம் வரைதல், இரசாயன வேலைகள், பட்டாசு உற்பத்தி மற்றும் அதிக சத்தம் அல்லது அதிர்வு சூழல்கள் ஆகியன இதில் அடங்கும்.