மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (Department of Science and Technology - DST) அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் மருத்துவம் (WISTEMM - Women in Science, Technology, Engineering, Mathematics and Medicine) ஆகிய துறையில் உள்ள பெண்களுக்கான இந்திய – அமெரிக்கத் தோழமைத் திட்டமானது இந்திய – அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்துடன் (IUSSTF - Indo-U.S. Science & Technology Forum) இணைந்து பெண் விஞ்ஞானிகள் பலருக்குச் சர்வதேச அனுபவத்தை வழங்கியுள்ளது.
சுமார் 20 பெண் விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காகவும் அவர்களின் ஆராய்ச்சி தொடர்பான புதிய தொழில்நுட்பங்களில் பயிற்சி பெறுவதற்காகவும் அமெரிக்கா முழுவதும் உள்ள 20 முன்னணி நிறுவனங்களுக்குப் பயணம் மேற்கொண்டனர்.
WISTEMM ஆனது பின்வருவனவற்றிற்காக இந்தியப் பெண் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோருக்கு வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள முதன்மை நிறுவனங்களில் சர்வதேசக் கூட்டு ஆராய்ச்சியை மேற்கொள்ளுதல் மற்றும்